Trust Shanthivanam
A | A

Voices

சாந்திவனம் மனநலகாப்பகத்தில் இருக்கும் மனநோயாளிகளை பார்த்து பேசியதில் மனநிறைவு ஏற்பட்டது. இவர்கள் அனைவருக்கும் பூரண குணமடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் . இங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

~ C . ஜமுனாராணி , திருச்சி . ~

பகவான் நாமத்தை சொல்வதை காட்டிலும் சிறந்த சமூக சேவை. மென்மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள் .

~ திருமதி . கீதா ஜெயகோபால் , திருச்சி . ~

மிகச் சிறப்பான மானுட சேவை நடந்து கொண்டிருக்கின்றது . மேலும் வளர வாழ்த்துக்கள் .

~ ம. பொன்னிளங்கோ, இயக்குநர், ஜென்னிஸ் அ஠~

உங்களின் பணி மகத்தானது. மனம் நல்ல முறையில் இருந்தால் வாழ்வில் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை. அவர்களின் மனதை சந்தோசமாகவும், தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை கூறி அவர்களை மேன்மேலும் சிறந்த முறையில் உருவாக்க என் வாழ்த்துக்கள். இங்கு வந்து போகும் வாய்ப்பு கிடைக்க வைத்த உங்களுக்கும் கடவுளுக்கும் நன்றி !

~ கி . பிரியா , ஒசூர் . ~